வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு


வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
x

வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திருச்சி

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருச்சி மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சியில் ஒரு கல்லூரியில் நடைபெற்றது. இதில் "வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன்" என்ற உறுதிமொழியை மாணவ-மாணவிகள் ஏற்று கொண்டனர். மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்வது குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி நிர்வாக அலுவலர் செந்தில்வடிவு, உதவி வருவாய் அலுவலர் சுகுமார் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story