நீர்நிலைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு


நீர்நிலைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு
x

கடையநல்லூர் நகராட்சியில் நீர்நிலைகள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக சீவலன் கால்வாய் கரையோரம் மரக்கன்றுகளை நடுதல் நீர்நிலைகள், நீரோடைகள் மற்றும் மழைநீர் வடிகால்கள் சுத்தப்படுத்தப்படும் பணி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் தலைமை தாங்கி, கால்வாய் கரையோரம் மரக்கன்றுகளை நட்டினார். நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இதில் சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் சக்திவேல், சிவா, நகர்மன்ற உறுப்பினர் அக்பர்அலி, மகளிர் சுய உதவி குழுக்கள், தாருஸ்ஸலாம் பள்ளி, ஹிதாயதுல் இஸ்லாம் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு நகராட்சிக்கு சொந்தமான கானாங்குளம் ஊரணி, விசாலாட்சி ஊரணி, அண்ணாமலை பொய்கை, தாமரைக்குளம், குசவன்குன்று ஆகிய ஊருணிகளில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்ட மாட்டோம் என்று சுகாதார உறுதிமொழி எடுக்கப்பட்டது.


Next Story