சரக்குவேன்- ஸ்கூட்டர் மோதல்; 2 பேர் சாவு


சரக்குவேன்- ஸ்கூட்டர் மோதல்; 2 பேர் சாவு
x

வேதாரண்யம் அருகே சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர்.

சரக்கு வேன்- ஸ்கூட்டர் மோதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று நேற்று மாலை கொண்டிருந்தது. அதேபோல திருத்துறைப்பூண்டியில் இருந்து வேதாரண்யம் நோக்கி ஒரு ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தது.

வேதாரண்யம் அருகே தென்னம்பலம் பஞ்சாயத்து சாலை அருகே ஸ்கூட்டரும், சரக்கு வேனும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சரக்கு வேன் கவிழ்ந்தது.

16 பேர் காயம்

ஸ்கூட்டரில் வந்த தேத்தாக்குடி வடக்கு பகுதியை சேர்ந்த மல்லிகா (வயது36), சரக்கு வேனில் சென்ற ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் திருத்துறைப்பூண்டி சேகல் கிராமத்தை சேர்ந்த செல்லையன் (55), மணியன் (50), ராமு (50), சதீஷ் (22) ஆகியோர் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

2 பேர் சாவு

இதில் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செல்லையன், நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மணியன் ஆகியோர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story