பர்கூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 2 பேர் பலி


பர்கூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 2 பேர் பலி
x

பர்கூர் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் டிரைவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

டிரைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி ராஜீவ் நகரை சேர்ந்தவர் பர்கத் (வயது 30). டிரைவர். இவர் மோட்டார்சைக்கிளில் சிகரலப்பள்ளி-அத்திமரத்துப்பள்ளம் சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக்அப் வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பர்கத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜூஸ் வியாபாரி

பர்கூர் தாலுகா மருதேப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன் (59). ஜூஸ் வியாபாரி. இவர் மொபட்டில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் வெற்றிலைதோட்டம் அருகில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் சீனிவாசன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story