மினி லாரி கவிழ்ந்து பெண் சாவு


மினி லாரி கவிழ்ந்து பெண் சாவு
x

மினி லாரி கவிழ்ந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கவுரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது70). இவர் பொன்னாம்பட்டி கிராமத்தில் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள அதே கிராமத்தை சேர்ந்த மூக்காயி, சுஜாதா, சவுந்தரம், செந்தாமரை, வேலாயி, லெட்சுமி, மணிக்கொடி உள்பட 17 பேர் கவுரிப்பட்டியில் இருந்து பொன்னாம் பட்டிக்கு மினி லாரியில் சென்றனர். அந்த லாரி நாட்டரசன் கோட்டை அருகே உள்ள முத்தூர் வாணியங்குடி விலக்கருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் மூக்காயி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகனத்தில் இருந்த 16 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story