வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி தீப்பிடித்து எரிந்தது

வைக்கோல் ஏற்றி வந்த மினி லாரி தீப்பிடித்து எரிந்தது
x

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தம்பிபட்டியில் வைக்கோல் ஏற்றி வந்த மினிலாரி தீப் பிடித்து எரிந்தது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தம்பிபட்டியில் வைக்கோல் ஏற்றி வந்த மினிலாரி தீப் பிடித்து எரிந்தது.

தீ விபத்து

தேவகோட்டையில் இருந்து மதுரை நோக்கி வைக்கோல் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் வழியாக மினி லாரி சென்றுள்ளது. அப்போது திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி பகுதியில் வரும்போது மின்கம்பி உரசியதில் தீ பிடித்தது. இதை அறியாமல் டிரைவர் லாரியை ஓட்டிவந்துள்ளார். அதனை கண்ட அந்தபகுதியை சேர்ந்த கவுன்சிலர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் லாரியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி வைக்கோலை அப்புறப்படுத்தினர்.

விசாரணை

தகவல் அறிந்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story