வாய்க்காலில் பாய்ந்த ஆம்புலன்ஸ்: சிகிச்சைக்கு சென்ற விவசாயி அதிர்ச்சியில் சாவு


வாய்க்காலில் பாய்ந்த ஆம்புலன்ஸ்: சிகிச்சைக்கு சென்ற விவசாயி அதிர்ச்சியில் சாவு
x

வாய்க்காலில் ஆம்புலன்ஸ் பாய்ந்ததால் சிகிச்ைசக்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயி அதிர்ச்சியில் இறந்தார்.

ஈரோடு

கடத்தூர்

வாய்க்காலில் ஆம்புலன்ஸ் பாய்ந்ததால் சிகிச்ைசக்கு அழைத்து செல்லப்பட்ட விவசாயி அதிர்ச்சியில் இறந்தார்.

வாய்க்காலுக்குள் பாய்ந்தது

சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 47). விவசாயி. இவர் சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று அவரை கோபியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆம்புலன்சிஸ் அழைத்து சென்றார்கள். அவருடன் பிரகாசின் மனைவி, அண்ணன், அண்ணன் மகன் என 3 பேர் சென்றனர்.

கோபி அருகே சிங்கிரிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் திடீரென ரோட்டோரம் உள்ள சிறிய வாய்க்காலுக்குள் பாய்ந்தது.

அதிர்ச்சியில் சாவு

இந்த விபத்தில் ஆம்புலன்சின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த திடீர் அதிர்ச்சியால் பிரகாசின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட மற்ற 4 பேரும் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

இதையடுத்து உடனே சத்தியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரகாசை வேறு வாகனத்தில் அழைத்து சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரகாஷ் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story