கார் மோதி மீன் வியாபாரி பலி


கார் மோதி மீன் வியாபாரி பலி
x

கார் மோதி மீன் வியாபாரி பலியானார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நீலகண்டி ஊருணி பகுதியை சேர்ந்தவர் அங்கமுத்து என்பவரின் மகன் முருகேசன் (வயது 55). மீன் வியாபாரியான இவர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் மீன்களை விற்பதற்காக கொண்டு சென்றார். ராமநாதபுரம் அருகே பாப்பாகுடி விலக்கு பகுதியில் சென்றபோது அந்தவழியாக வந்த கார் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் படுகாயம் அடைந்த முருகேசன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து முருகேசனின் மனைவி செல்லமுத்து அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் பட்டினம்காத்தான் பகுதியை சேர்ந்த ராமராஜ் மகன் இளங்கோ (38) என்பவரை கைது செய்தனர்.


Next Story