விபத்தில் மேலும் ஒருவர் பலி


விபத்தில் மேலும் ஒருவர் பலி
x

விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை அண்ணா சாலை முதல் வீதியில் வசித்தவர் செல்வராஜ் (வயது 70). வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சீதா (62). சம்பவத்தன்று இவர்கள் மோட்டார்சைக்கிளில் சென்றபோது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிஸ்தேவன் தீட்சித் என்பவர் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீதா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆறாவயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





Next Story