பர்கூர் மலை பாதையில் கரும்பு ஏற்றி வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்து

பர்கூர் மலை பாதையில் கரும்பு ஏற்றி வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்து
x

பர்கூர் மலை பாதையில் கரும்பு ஏற்றி வந்த லாரி ரோட்டில் கவிழ்ந்து விபத்து

ஈரோடு

அந்தியூர்

கர்நாடக மாநிலம் ஹனூரில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 47) என்பவர் ஓட்டி வந்தார். அந்தியூரை அடுத்த தட்டக்கரை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவிச்சந்திரன் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி அறிந்தும் பர்கூர் போலீசார் சம்பவ இடதுக்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதைத்ெ்தாடர்ந்து வாகன போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவம் காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story