விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x

விபத்தில் தொழிலாளி பலியானார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த அம்பலூரை சேர்ந்தவர் சிவாஜி (வயது 55). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர், சின்னத்தாய் (47) என்பவருடன் பர்கூர் அருகே கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சிவாஜி பரிதாபமாக இறந்தார். சின்னதாய் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story