பஸ் மோதி முதியவர் பலி
பஸ் மோதி முதியவர் பலியானார்.
கருப்பூர்:
கருப்பூர் அருகே உள்ள தே.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 70). இவர் நேற்று மாலை டால்மியா போர்டு என்ற இடத்தில் நடந்து சென்ற போது, சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து மேட்டூருக்கு சென்ற தனியார் பஸ் அவர் மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செக்காரப்பட்டி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர் மாரியப்பன் (46) என்பவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire