நல்லம்பள்ளி அருகே மொபட் மோதி பூ வியாபாரி பலி
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளுப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 80). இவர் ஒட்டப்பட்டியில் சாலையோரம் பூக்கடை வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று காலை பெருமாள் வியாபாரத்தை முடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஒட்டப்பட்டி பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற மொபட் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பெருமாள் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story