கருப்பூர் அருகே டீக்கடைக்குள் பாய்ந்த தனியார் பஸ்-3 பேர் படுகாயம்


கருப்பூர் அருகே டீக்கடைக்குள் பாய்ந்த தனியார் பஸ்-3 பேர் படுகாயம்
x

கருப்பூர் அருகே டீக்கடைக்குள் தனியார் பஸ் புகுந்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம்

கருப்பூர்:

சேலத்தில் இருந்து மேட்டூருக்கு நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் கருப்பூர் அருகே தண்ணி தொட்டி என்ற இடத்தில் சென்றபோது, ஓமலூரில் இருந்து கோட்டகவுண்டம்பட்டி சர்வீஸ் சாலையில் குறுக்கே சென்ற லாரியின் மீது மோதாமல் இருக்க இடதுபுறம் பஸ்சை அதன் டிரைவர் திருப்பி உள்ளார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் பாயந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள். மேலும் அந்த வழியாக வந்த ஆம்னி வேன் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீதும் பஸ் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி மற்றும் ஆம்னிவேன், 2 மோட்டார் சைக்கிள்கள் நொறுங்கின. மோட்டார் சைக்கிளில் வந்த கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 40), அவரது மனைவி சுலக்சனா, இவர்களது மகன் லோகேஷ் (12) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் சண்முகம் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story