மொடக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி பஸ்-லாரி மோதல்; 5 மாணவிகள் காயம்
மொடக்குறிச்சி அருகே தனியார் கல்லூரி பஸ்-லாரி மோதல்; 5 மாணவிகள் காயம்
ஈரோடு
மொடக்குறிச்சி
பெருந்துறை அடுத்த தோப்புபாளையத்தில் செயல்படும் தனியார் கல்லூரியின் பஸ் நேற்று காலை மொடக்குறிச்சி பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை ஏற்றியபடி சென்று கொண்டிருந்தது. சோலார் அருகே உள்ள சாணார்மேடு என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்றுகொண்டு இருந்த டிப்பர் லாாி திடீரென நின்றது. இதனால் பஸ் லாரியின் பின்பக்கம் மோதியது, இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பஸ்சுக்குள் இருந்த 5 மாணவிகள் காயமடைந்தனர். உடனே அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்கள். அதன்பின்னர் கல்லூரிக்கு சொந்தமான வேறு பஸ் வரவழைக்கப்பட்டு மற்ற மாணவிகள் கல்லூரிக்கு சென்றார்கள். இந்த விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story