விபத்தில் தொழிலாளி சாவு
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள மறுக்காலம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது 32). தொழிலாளி. இவர் சொந்த வேலை காரணமாக ஏ.பள்ளிப்பட்டிக்கு சென்று விட்டு அங்கிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரம் சர்க்கரை ஆலை பகுதியில் சென்றபோது, சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் எர்த் கம்பி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஜெயபிரகாஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
Next Story