விபத்தில் பெண் பலி; மகன்- பேரன் படுகாயம்


விபத்தில் பெண் பலி; மகன்- பேரன் படுகாயம்
x

கொண்டலாம்பட்டி அருகே விபத்தில் ெபண் பலியானார். மகன், பேரன் படுகாயம் அடைந்தனர்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

சாமி தரிசனம்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தரெுவை சேர்ந்தவர் சின்ன பொண்ணு (வயது 48). இவர் கடந்த 25-ந் தேதி அன்று தனது மகன் வேதமூர்த்தி (30) மற்றும் பேரக்குழந்தை கீர்த்திஸ் (4) ஆகியோருடன் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள தாழையூர் குல தெய்வ கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை வேதமூர்த்தி ஓட்டி வந்தார். சின்னப்பொண்ணும், அவருடைய பேரன் கீர்த்திசும் பின்புறமாக அமர்ந்து கொண்டு வந்தனர்.

பலி

இதனிடையே அவர்கள் அரியானூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று வேதமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் தலையில் அடிபட்ட சின்ன பொண்ணு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story