சங்ககிரி அருகே விபத்தில் விசைத்தறி உரிமையாளர் சாவு
சங்ககிரி அருகே விபத்தில் விசைத்தறி உரிமையாளர் இறந்தார்.
சங்ககிரி:
கொங்கணாபுரம் அருகே சின்னப்பம்பட்டி பாப்பம்பாடி அண்ணா நகரை சேர்ந்த பெரியசாமி (வயது 39). விசைத்தறி உரிமையாளர். இவர் தனது தறிக்கு நூல் வாங்கி வர, தித்தியாம்பட்டி பகுதியை சேர்ந்த தறிக்கூடத்தின் மேஸ்திரி முருகேசன் (30) என்பவரை தனது ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு சங்ககிரிக்கு வந்தார். பின்னர் அவர்கள் திரும்பிய போது, சங்ககிரி அருகே மஞ்சக்கல்பட்டியில் ஒரு வளைவில் ஸ்கூட்டர் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஸ்கூட்டரை ஓட்டிய பெரியசாமி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த முருகேசன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.