கோபி அருகே வயலுக்குள் பாய்ந்த வேன்- டிரைவர் உயிர் தப்பினார்
கோபி அருகே வயலுக்குள் பாய்ந்த வேன்- டிரைவர் உயிர் தப்பினார்
ஈரோடு
கடத்தூர்
கோபியை அடுத்துள்ள பங்களாப்புதூர் எருமைகுட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இவர் நேற்று கரட்டடிபாளையம் பகுதியில் செயல்படும் வாரச்சந்தைக்கு காய்கறிகளை வேனில் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த காருக்கு வழிவிடும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் சுமார் 10 அடி ஆழத்தில் இருந்த வயலுக்குள் பாய்ந்தது. அந்த வழியாக வந்தவர்கள் ஓடிச்சென்று வேனுக்குள் இருந்த மணிகண்டனை மீட்டார்கள். அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
வயலுக்குள் பாய்ந்த வேன் கிரேன் மூலம் மீட்கப்பட்டது. எனினும் வேனில் கொண்டு சென்ற காய்கறிகள் சேதமானது. இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story