நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கண்டக்டர் பலி


நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கண்டக்டர் பலி
x

நின்று கொண்டிருந்த பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கண்டக்டர் பலி

ஈரோடு

பெருந்துறை

பவானி அருகே உள்ள பெரியபுலியூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் சுரேஷ் (வயது 31). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய நண்பர் பவானி எரப்பநாயக்கனூரை சேர்ந்த சின்னராசு (28). தனியார் பஸ் கண்டக்டர்.

நேற்று முன்தினம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலுக்கு வந்துவிட்டு நசியனூருக்கு மோட்டார்சைக்கிளில் சுரேஷ் சென்று கொண்டிருந்தார். அவருடன் மோட்டார்சைக்கிளில் நண்பர் சின்னராசுவும் சென்றார். சுரேசுக்கு பின்னால் சின்னராசு உட்கார்ந்திருந்தார். பெருந்துறையை அடுத்த செங்காளிபாளையத்தில் உள்ள ஒரு கோவிலின் அருகே சென்றபோது நின்று கொண்டிருந்த அரசு டவுன் பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளிலிருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சின்னராசு இறந்தார். சுரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story