மல்லூர் அருகே டிப்பர் லாரி மோதி செங்கல் வியாபாரி பலி


மல்லூர் அருகே டிப்பர் லாரி மோதி செங்கல் வியாபாரி பலி
x

மல்லூர் அருகே டிப்பர் லாரி மோதி செங்கல் வியாபாரி பலியானார்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

வியாபாரி

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டி இருசாயி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் சரவணன் (வயது 35). கட்டிடங்களுக்கு தேவையான செங்கல், மணல் உள்ளிட்டவற்றை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் சரவணன் நேற்று காலை 10 மணி அளவில் சீலநாயக்கன்பட்டியிலிருந்து நிலவாரப்பட்டி நோக்கி சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

லாரி மோதியது

அப்போது நிலவாரப்பட்டி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story