நல்லம்பள்ளி அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது


நல்லம்பள்ளி அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி:

ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 35-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் பயணம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றபோது, பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய பஸ், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பஸ்சின் டிரைவர் லேசான காயம் அடைந்தார். பஸ்சில் இருந்த அய்யப்ப பக்தர்கள் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசாமக் உயிர் தப்பினர். இந்த விபத்தால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story