மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கட்டிட மேஸ்திரி உள்பட 3 பேர் படுகாயம்
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் சங்கரஅள்ளியை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் மோரூருக்கு கட்டிட வேலைக்காக சென்றார். வேலையை முடித்து விட்டு மாலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மோரூர்-பொம்மிடி சாலையில் சென்றபோது, எதிரே கோவிந்தாபுரத்தை சேர்ந்த சிரஞ்சீவி (24), அர்ச்சுனன் (16) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், சிவானந்தம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story