விபத்தில் முதியவர் பலி
விபத்தில் முதியவர் பலியானார்.
சேலம்
கருப்பூர்:
சூரமங்கலம் அருகே உள்ள மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயர், (வயது 73). இவர் நேற்று காலை 11 மணி அளவில் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கருப்பூர் டால்மியா போர்டு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்லும் போது லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. ஆஞ்சநேயர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மீது லாரி சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story