ஆத்தூரில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி


ஆத்தூரில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலி
x

ஆத்தூரில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த வியாபாரி பலியானார்.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் தெற்கு உடையார்பாளையம் அய்யாவு உடையார் தெருவை சேர்ந்தவர் ராமு நாயக்கர் (வயது 73). வெற்றிலை வியாபாரி. இவர் நேற்று காலை ஆத்தூரில் சேலம் செல்லும் ஒரு பஸ்சின் மேல்பகுதியில் வெற்றிலை பண்டல்களை வைத்து கட்டிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென பஸ் நகர்த்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் நிலை தடுமாறிய ராமுநாயக்கர் பஸ்சின் மேலே இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ராமுநாயக்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story