தாளவாடியில் மினி லாரி கவிழ்ந்து விபத்து
தாளவாடியில் மினி லாரி கவிழ்ந்து விபத்து
ஈரோடு
தாளவாடி
தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் உருளைக்கிழங்கு பாரம் ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள தனியார் வங்கி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டி வந்த தாளவாடியை சேர்ந்த டிரைவர் கார்த்திக் காயமின்றி உயிர் தப்பினார். மேலும் லாரியில் இருந்த உருளைக்கிழங்கு மூட்டைகளும் ரோட்டில் சரிந்தது.
இதனால் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மினி லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்துக்கு குறித்து தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story