சாலையை கடக்க முயன்றவர் வாகனம் மோதி சாவு
சாலையை கடக்க முயன்றவர் வாகனம் மோதி இறந்தார்.
மதுரை
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள பாரைபத்தியில் மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் நேற்று அதிகாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகாலை நேரம் என்பதால் உடல் சாலையில் கிடப்பது தெரியாமல் அடுத்தடுத்த வாகனங்கள் ஏறியதால் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story