லாரிகள் மோதியதில் கிளீனர் பலி


லாரிகள் மோதியதில் கிளீனர் பலி
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்:

கிருஷ்ணகிரியில் இருந்து கோழிகளை ஏற்றி கொண்டு கோவைக்கு நேற்று முன்தினம் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை நாமக்கல்லை சேர்ந்த வெங்கடேசன் ஓட்டி சென்றார். அவருடன் ராசிபுரத்தை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 49) என்பவர் கிளீனராக உடன் சென்றார். இந்த லாரி வெப்படை அருகே பச்சாம்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது திடீரென முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் கிளீனர் மாதேஸ்வரன் பலியானார். வெப்படை போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story