பவானி அருகே இரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


பவானி அருகே இரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

பவானி அருகே இரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

பவானி

பவானி அருகே இரும்பு பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

லாரி கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கோவைக்கு இரும்பு கம்பிகள் ஏற்றிய லாரி ஒன்று நேற்று புறப்பட்டது. லாரியை வெடிமுத்து (வயது 44) என்பவர் ஓட்டினார். ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை அருகே உள்ள திருப்பத்தில் லாரி திரும்பியபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்து இரும்பு கம்பிகள் சிதறி ரோட்டில் விழுந்தது. மேலும் அந்த ரோட்டின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது இரும்பு கம்பிகள் விழுந்தன. இதில் மோட்டார்சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபதில் லாரி டிரைவர் வெடிமுத்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக பவானி பழைய பஸ் நிலையம் வழியாக ஈரோடு, கோவை, சேலம் நோக்கி வந்த வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story