சேலம் புதிய பஸ் நிலைய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்;அரசு ஊழியர் பலி


சேலம் புதிய பஸ் நிலைய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்;அரசு ஊழியர் பலி
x

சேலம் புதிய பஸ் நிலைய மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அரசு ஊழியர் பலியானார்.

சேலம்

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவர் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் மோட்டார் சைக்கிளில் குரங்குச்சாவடியில் இருந்து மேம்பாலத்தில் ஏறி புதிய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது மேம்பாலத்தில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அவரது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும் அவர் நிலை தடுமாறி அங்கிருந்த தடுப்பு சுவரில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story