கடம்பூர் அருகே அரசு பஸ் மீது மோதிய சரக்கு வேன்
கடம்பூர் அருகே அரசு பஸ் மீது மோதிய சரக்கு வேன்
டி.என்.பாளையம்
கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து பசுவனாபுரம் நோக்கி சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. வேனை தங்கவேல் (வயது 45) என்பவர் ஓட்டினார். கடம்பூர் இருட்டிபாளையம் அருகே ஒரு வளைவில் வேன் திரும்பும்போது கடம்பூரை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அரசு பஸ் வந்த திசை மேடாகவும், சரக்கு வேன் வந்த திசை பள்ளமாகவும் இருந்தது. இதனால் தங்கவேல் வேனை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. கண்இமைக்கும் நேரத்தில் சரக்கு வேன் அரசு பஸ்சின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் வேனின் முன்பகுதியும், பஸ் கண்ணாடியும் ெநாறுங்கியது.
நல்லவேளையாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்ைல. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு வந்த கடம்பூர் போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். அரசு பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.