மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
சேலம்
தேவூர்:
தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி வினோபாஜி நகரை சேர்ந்தவர் முனுசாமி (வயது 87). பழைய பேப்பர் மற்றும் பாட்டில்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 9-ந் தேதி புளியம்பட்டி ஊராட்சி அலுவலக பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது குமாரபாளையத்தில் இருந்து எடப்பாடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முனுசாமி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார். இதுகுறித்து அவருடைய மகன் சித்துராஜ் தேவூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story