சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்து:மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் தொழிலாளி பலியானார்.
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 45). இவர், துணிக்கு இஸ்திரி போடும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், பிஸ்மி நகரில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஆண்டிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். க.விலக்கு அருகே சென்றபோது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மாட்டின் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. துரைப்பாண்டியும் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story