நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பிளஸ்-1 மாணவி சாவு - கடத்தி சென்றதாக வாலிபர் கைது


நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பிளஸ்-1 மாணவி சாவு - கடத்தி சென்றதாக வாலிபர் கைது
x

நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பிளஸ்-1 மாணவி உயிரிழந்தார். கடத்தி சென்றதாக வாலிபர் கைது

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் பிளஸ்-1 மாணவிக்கும், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் தென்னரசுக்கும் (வயது 20) பழக்கம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர்கள் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கல்லுப்பட்டி சென்றுள்ளனர். திருமங்கலம் ஆலம்பட்டி அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே நாய் பாய்ந்தது. இதனால் நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே விபத்தில் மகளை பறிக்கொடுத்த மாணவியின் தந்தை இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் மாணவியை கடத்தி சென்றதாக திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து தென்னரசுவை கைது செய்தனர்.


Next Story