விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்


விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவுப்படி, விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பான தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ரோஸிராணி வரவேற்று பேசினார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தூத்துக்குடி உதவி மாவட்ட அலுவலர் முத்துப்பாண்டியன் கலந்து கொண்டு, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், புயல் மற்றும் வெள்ள காலங்களில் எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது போன்றவை குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினார். மேலும் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் ராஜன் ராயன் செய்திருந்தார்.


Next Story