விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி


விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

வாய்மேட்டில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்பு படையினர் சார்பில் நடந்தது. இதை முன்னிட்டு வாய்மேடு இலக்குவனார் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். இதில் மாணவர்களுக்கு பட்டாசு வெடிக்கும்போது செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ், ஆசிரியர் மணிமொழி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story