திருவாரூர் டிரைவர் விபத்தில் பலி


திருவாரூர் டிரைவர் விபத்தில் பலி
x

சவுதி அரேபியாவில் திருவாரூர் டிரைவர் விபத்தில் உயிரிழந்தாா். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி;

சவுதி அரேபியாவில் திருவாரூர் டிரைவர் விபத்தில் உயிரிழந்தாா். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டிரைவர்

திருவாரூர் மாவட்டம் சித்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது51). இவருடைய மனைவி கோமதி(40). செந்தில்குமார் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்த செந்தில்குமார் 8 மாதங்கள் சொந்த ஊரில் தங்கி இருந்தார்.இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மீண்டும் சவுதி அரேபியாவுக்கு செந்தில்குமார் வேலைக்கு சென்றார். கடந்த 23-ந் தேதி சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் செந்தில்குமார் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டரிடம் கோரிக்கை

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனா். மேலும் செந்தில்குமாரின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் செந்தில்குமார் உடலை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.மேலும் செந்தில்குமாரின் மனைவி கையெழுத்திட்ட மனுவை உறவினர் நவநீதகிருஷ்ணன், சேமங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர் அன்பு உள்ளிட்டோர் திருவாரூர் மாவட்ட கலெக்்டரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story