பேரையூர் அருகே விபத்து - கிணற்றுக்குள் பாய்ந்த கார்; ஆசிரியர் உயிர் தப்பினார்


பேரையூர் அருகே விபத்து - கிணற்றுக்குள் பாய்ந்த கார்; ஆசிரியர் உயிர் தப்பினார்
x

பேரையூர் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் பள்ளி ஆசிரியர் உயிர் தப்பினார்.

மதுரை

பேரையூர்

பேரையூர் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்தது. இந்த விபத்தில் பள்ளி ஆசிரியர் உயிர் தப்பினார்.

கிணற்றுக்குள் பாய்ந்த கார்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 52). இவர் செங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் சொந்த வேலையின் காரணமாக கார் ஒன்றில் தென்காசியில் இருந்து கோவைக்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து காரில் தென்காசிக்கு திரும்பி ெகாண்டிருந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக பேரையூர் அருகே சின்னபூலாம்பட்டி பகுதியில் கார் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகிலுள்ள 30 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்தது.

ஆசிரியர் தப்பினார்

ஆனால், துரிதமாக செயல்பட்டு கண் இமைக்கும் நேரத்தில் கார் கதவை திறந்து வெளியே வந்து, நீச்சல் அடித்து கிணற்றின் மேல் பகுதிக்கு வந்து ஜெரால்டு கரையேறினார். ஒருவேளை காரில் இருந்து வெளியேவர சற்று தாமதமாகி இருந்தாலும் கார் அதிக ஆழத்தில் மூழ்கி இருக்கக்கூடும்.

தகவல் அறிந்து பேரையூர் போலீசார், டி.கல்லுப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் குருசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் கிணற்றில் ஒரு மணி நேரமாக போராடி காரை கிரேன் உதவியுடன் கிணற்றில் இருந்து மீட்டனர். இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story