வாலிபர் பலி
வாலிபர் பலி
திருப்பூர்
ஊத்துக்குளி
ஈரோடு மாவட்டம் கங்காபுரம் ஆட்டையாம்பாளையம் கிழக்குவீதி பகுதியைச் சேர்ந்த கந்தவேல் (வயது 30) இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவர் நேற்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் செங்கப்பள்ளியில்லிருந்து பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். கந்தவேல் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையம் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் மீது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்ட கந்தவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story