திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து -அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி


திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து -அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி
x

திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றனர்

மதுரை வசந்தநகர் இருளப்பசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வீரணபாரதி (வயது 41). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். விருதுநகர் மாவட்டம் வடமலைகுறிஞ்சி தெருவை சேர்ந்தவர் சங்கர குருசாமி(56). திருமண புரோக்கர்.

இவர்கள் 2 பேரும் திருமங்கலம் பகுதியில் இருந்து மதுரையை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் திருமங்கலத்தில் இருந்து மதுரை ஆரப்பாளையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் வந்தது. மதுரை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த டிரைவர் சுப்பு பஸ்சை ஓட்டி வந்தார்.

திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலை அருகே ரோட்டின் ஓரத்தில் நின்று இருந்த ஒரு காரை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் கடந்து செல்ல முயன்றனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது.

2 பேர் பலி

அதில் வீரண பாரதி, சங்கர குருசாமி ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் விபத்தில் பலியானவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story