வேகத்தடை இல்லாததால் விபத்துகள் அதிகரிப்பு


வேகத்தடை இல்லாததால் விபத்துகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2023 12:45 AM IST (Updated: 24 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே, 3 பிரிவு சாலைகளில் வேகத்தடை இல்லாததால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே, 3 பிரிவு சாலைகளில் வேகத்தடை இல்லாததால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

3 பிரிவு சாலைகள்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் வழியில் பாய்க்காரத்தெரு பாலம் பகுதியில் 3 பிரிவு சாலைகள் செல்கின்றன. இதன் வழியாக கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, கொரடாச்சேரி, குடவாசல், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த பகுதியில் உள்ள சாலைகளில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்துகள் அடிக்கடி நடக்கிறது.

வேகத்தடை அமைக்க வேண்டும்

விபத்துகளை தடுக்க பாய்க்காரத்தெரு பாலம் எதிரே 3 பிரிவு சாலைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயந்த் கூறியதாவது:-

கூத்தாநல்லூர்- வடபாதிமங்கலம் சாலை வழியாக தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வடபாதிமங்கலம், கூத்தாநல்லூர், பாய்க்காரத்தெரு 3 பிரிவு சாலையில் செல்லும் வாகனங்கள் திடீரென ஏதாவது ஒரு சாலையில் திரும்பும் போது, எதிர் எதிரே வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்து நடக்கிறது. அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக இருப்பதால் இந்த பகுதியை கடந்து செல்வதற்குள் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட வேண்டி உள்ளது.

விபத்துகளை தடுக்க...

3 பிரிவு சாலைகளிலுமே வேகத்தடை இல்லாததால் சிலர் வேகமாக சென்று திடீரென திரும்புகிறார்கள். இந்த பகுதி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். எனவே அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், வாகனங்கள் வேகமாக சென்று திரும்புவதை தடுக்கவும் பாய்க்காரத்தெரு பாலம் எதிரே 3 பிரிவு சாலையிலும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story