திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் காயம்
திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து; 6 பேர் காயம்
சத்தியமங்கலம்
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 38). இவர் தனது குடும்பத்தினர் 14 பேருடன் சூலூரில் இருந்து கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வேனில் சென்றனர். வேனை சூலூரை சேர்ந்த வினோத் (38) ஓட்டினார். கோவிலுக்கு சென்று சாமியை கும்பிட்டுவிட்டு அவர்கள் மீண்டும் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். திம்பம் மலைப்பாதையின் 3-வது வளைவில் நேற்று வந்து கொண்டிருந்தபோது திடீரென பிரேக் பிடிக்காமல் வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் வந்த மாரியம்மாள் (80), நாகமணி (60), சின்னகண்ணி (55), தேவி (45), பிருந்தா (28) மற்றும் 12 வயது சிறுவன் ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 6 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.