கார்-ஸ்கூட்டர் மோதல்; 2 பேர் பலி


கார்-ஸ்கூட்டர் மோதல்;  2 பேர் பலி
x
திருப்பூர்


பொங்கலூர் அருகே காரும், ஸ்கூட்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கார்-ஸ்கூட்டர் மோதல்

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள வாவிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் தனபால் (வயது 25). பனியன் நிறுவன தொழிலாளி. அதுபோல் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள மங்களத்தைச் சேர்ந்த மணி மகன் அருண் (20). மோட்டார்சைக்கிள் மெக்கானிக்.

இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதால் நேற்று முன்தினம் மதியம் வாவி பாளையத்திலிருந்து ஒரு ஸ்கூட்டரில் பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பல்லடம் -உடுமலை சாலையில்கார்-ஸ்கூட்டர் மோதல்;

2 பேர் பலி வாவிபாளையத்தை அடுத்த குள்ளம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது திருப்பூரிலிருந்து மூணாறு நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற தனபால், அருண் ஆகிய 2 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சிறிது நேரத்திலும் தனபால் மற்றும் அருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (43) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் 2பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story