மோட்டார்சைக்கிள்-மொபட் மோதல்; கணவர் பலி; மனைவி காயம்
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் மொபட் ேமாதி கணவர் பலியானார்.மனைவி படுகாயம் அடைந்தார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார்சைக்கிள் -மொபட் மோதல்
வெள்ளகோவில் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் நேற்று முன்தினம் வள்ளியரச்சல் -வெள்ளகோவில் ரோட்டில் சிவகுமார் நகர் என்ற இடத்தில் மோட்டார்சைக்கிளில் தனது மனைவி கவிதாவை (40) பின்னால் உட்கார வைத்துக்கொண்டு வெள்ளகோவிலை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது டி.ஆர்.நகர் ரோட்டில் இருந்து வந்த மொபட் செந்தில்குமார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் செந்தில்குமார், கவிதா இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கணவன் பலி
பிறகு மேல் சிகிச்சைக்காக செந்தில்குமாரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தில்குமார் இறந்துவிட்டார்.
கவிதா ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிவிட்டார்.இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.