மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி


மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
x
திருப்பூர்


பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, சேகாம்பாளையத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது46). இவர் அருள்புரம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ந்தேதி உறவினரை சந்திக்க, மோட்டார் சைக்கிளில் பல்லடம்-தாராபுரம் ரோட்டில் சென்றார். பல்லடத்தை அடுத்த ஆலூத்துபாளையம் பிரிவு அருகே சென்றபோது, திடீரென நிலைதடுமாறி சாலையோர மைல் கல்லில் மோட்டார்சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது தந்தை கந்தன் கொடுத்த புகாரின் பேரில், இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story