மரம் அறுக்கும் எந்திரத்தின் பிளேடு உடைந்து குத்தியதில் கணக்காளர் சாவு
மரம் அறுக்கும் எந்திரத்தின் பிளேடு உடைந்து குத்தியதில் கணக்காளர் உயிரிழந்தார்
கும்பகோணம் அருகே உள்ள மாத்தூரில் கிறிஸ்டோபர் என்பவர் மரப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் கொத்தங்குடி அருளாந்தபுரம் பகுதியை சேர்ந்த ஞான சுரேஷ்குமார் (வயது 55) என்பவர் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இங்கு நாச்சியார்கோவில் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பிரசாத் (30) என்பவர் மரம் அறுக்கும் எந்திரத்தின் ஆபரேட்டராக பணிபுரிகிறார். இந்தநிலையில் ஞான சுரேஷ்குமார், மரம் அறுப்பதை பார்வையிட்டு கொண்டிருந்தபோது திடீரென பிளேடு உடைந்து ஞான சுரேஷ்குமார் நெஞ்சில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஞான சுரேஷ்குமாரின் மகன் பிரிட்டோ, நாச்சியார்கோவில் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.