கெலமங்கலம் மருத்துவ குழுவினர் சாதனை


கெலமங்கலம் மருத்துவ குழுவினர் சாதனை
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி கெலமங்கலம் மருத்துவ குழுவினர் சாதனை படைத்தனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

கெலமங்கலத்தில் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி 1,208 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஒரே இடத்தில் அதிகளவு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சாதனை படைத்தனர். இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு என்ற சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. அதற்கான சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், சுகாதார துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


Next Story