தலைமன்னார்-தனுஷ்கோடி வரை நீந்தி டெல்லி பெண் ஆசிரியை சாதனை
தலைமன்னார்-தனுஷ்கோடி வரை நீந்தி டெல்லி பெண் ஆசிரியை சாதனை படைத்தார்.
ராமநாதபுரம்
ராமேசுவரம்,
டெல்லியை சேர்ந்தவர் மீனாட்சி பகுஜா (வயது 45). இவர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி வருவதற்காக ராமேசுவரத்திலிருந்து கடந்த 1-ந் தேதி விசைப்படகு ஒன்றில் தலைமன்னாருக்கு புறப்பட்டு சென்றார். இவருடன் 12 பேர் உதவியாக படகில் சென்றனர்.
இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு நீந்த தொடங்கினார். நேற்று காலை 9 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதி வந்து தனது நீச்சல் சாதனை பயணத்தை நிறைவு செய்தார். சுமார் 28 கிலோமீட்டர் தூர கடல் பாதையை 9 மணி நேரத்தில் கடந்து சாதனை செய்துள்ளார். இவரை ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க தலைவர் என்.ஜே. போஸ் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் பாராட்டினர்.
Related Tags :
Next Story