தேசிய தடகள போட்டியில் சாதனை: மாணவிக்கு பாராட்டு


தேசிய தடகள போட்டியில் சாதனை:  மாணவிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 23 Nov 2022 12:15 AM IST (Updated: 23 Nov 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

தேசிய தடகள போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற 37-வது தேசிய தடகள உயரம் தாண்டுதல் போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ஆலிஸ் தேவ பிரசன்னா வெண்கல பதக்கம் வென்றார். 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவி சஹானா வெண்கல பதக்கம் வென்றார். இந்த இரண்டு மாணவிகளுக்கும் பாராட்டு விழா தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆர்.ஜவஹர் கலந்துகொண்டு மாணவிகளை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கே.பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story