தேசிய சிலம்பம் போட்டியில் சாதனை: கோவில்பட்டி பள்ளி மாணவருக்கு பாராட்டு


தேசிய சிலம்பம் போட்டியில் சாதனை:  கோவில்பட்டி பள்ளி மாணவருக்கு பாராட்டு
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேசிய சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த கோவில்பட்டி பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

பெங்களூரு லயோலா கல்லூரியில் தேசிய அளவில் சிலம்பம் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் நந்தா 8 வயது பிரிவில் இரட்டைக் கம்பு சுற்றுதல், தொடும் முறை போட்டி, ஒற்றை கம்பு சுற்றுதல் போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றார்.

இந்த சாதனை படைத்த மாணவருக்கு கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் காசிராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் லில்லி ஜோன், ஆசிரியர்கள் கிராந்தி, மஞ்சுளா, செல்வி, குமுதவல்லி, முருகவள்ளி, சுமதி மற்றும் ஆசிரியர்கள் மாணவரை பாராட்டி பேசினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story